லாவா பிளேஸ் 5-ஜி ஸ்மார்ட்போன்

லாவா நிறுவனம் புதிதாக 5-ஜி நுட்பத்தில் செயல்படக் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
லாவா பிளேஸ் 5-ஜி ஸ்மார்ட்போன்
Published on

இது 6.5 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டது. ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிடி பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. ரேம்களைக் கொண்டதாகவும், 128 ஜி.பி. நினைவகம் உடையதாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நினைவகத் திறனை ஒரு டி.பி. வரை மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் அதிகரித்துக்கொள்ளலாம்.

இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு சிம் கார்டு பயன் படுத்தும் வசதி கொண்டது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் கொண்டது. நீலம், பச்சை வண்ணங்களில் வந்துள்ளது. 6 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.11,499.

X

Daily Thanthi
www.dailythanthi.com