லாவா பிளேஸ் ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள லாவா நிறுவனம் புதிதாக பிளேஸ் என்ற பெயரில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
லாவா பிளேஸ் ஸ்மார்ட்போன்
Published on

இது 6.5 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டுள்ளது. இதில் மீடியா டெக் ஹீலியோ ஏ 22 என் எம் குவாட் கோர் எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளது. இதன் பின்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. பின்புறம் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 10 வாட் சார்ஜருடன் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டதாக இது வந்துள்ளது.

இது 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் மற்றும் இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. இதன் விலை சுமார் ரூ.8,999.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com