

லெனோவா நிறுவனம் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கே 10 என்ற பெயரிலான டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. இது 10.3 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. திரையைக் கொண்டது. இதில் மீடியாடெக் ஹீலியோ பி 22 டி எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டது.
இதன் பின்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவும் உள்ளன. டால்பி ஆடியோ ஸ்பீக்கர் உள்ளது. நீடித்து செயல்படும் வகையில் 7500 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. தேவைப்பட்டால் இதற்கென ஸ்டைலஸ் பேனாவையும் வாடிக்கையாளர் தனியாக வாங்கிக் கொள்ளலாம். நீல நிறத்தில் இது வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.25,000.
3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.13,999. இதில் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.15,999. இதில் எல்.டி.இ. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.16,999.