லெனோவா பி 11 டேப்லெட்

லெனோவா நிறுவனம் பி 11 ரக டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.
லெனோவா பி 11 டேப்லெட்
Published on

லெனோவா நிறுவனம் பி 11 ரக டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. இது 11 அங்குல 2-கே தொடு திரையைக் கொண்டுள்ளது. கண்களுக்கு பாதுகாப்பளிக்கும் தொழில்நுட்பம் கொண்டது. இதில் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 662 பிராசஸர், 4 ஜி.பி. ரேம் கொண்டதாக வந்துள்ளது. இதன் மேல்பாகம் அலாய் உலோகத்தால் ஆனது.

இதில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உள்ளது. முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. பின்புறம் ஆட்டோ போகஸுடன் கூடிய 13 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது.

இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 12 மணி நேரம் செயல்படும். பண்பலை ரேடியோ வசதி கொண்டது. 20 வாட் சார்ஜர், 7,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டது. கிரே வண்ணத்தில் வந்துள்ள இந்த டேப்லெட் விலை சுமார் ரூ.24,999.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com