லெனோவா ஸ்மார்ட் கடிகாரம்

கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் லெனோவா நிறுவனம் குரல் வழிக்கட்டுப்பாட்டான அலெக்ஸாவை உள்ளீடாகக் கொண்டு செயல்படும் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
லெனோவா ஸ்மார்ட் கடிகாரம்
Published on

இதில் உள்ள டிஜிட்டல் ஸ்பீக்கர் அலாரமாக செயல்படும். மிருதுவான துணியை மேல்பாகமாகக் கொண்டுள்ளது. இதனால் விரல்களைத்தொட்டு இயக்குவது மிகவும் பிடித்தமானதாக இருக்கும். நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் வந்துள்ளது.

முன்புறம் இது 4 அங்குல எல்.இ.டி. டிஸ்பிளேயைக் கொண்டது. நேரம் மற்றும் வானிலை, ஈரப்பதம், வெப்பம் உள்ளிட்ட விவரங்களை அளிக்கும். இதில் உள்ள 3 வாட் ஸ்பீக்கர் மூலம் உங்களுக்கு விருப்பமான பாடல்களைக் கேட்டு மகிழலாம். ஆடியோபுக் மற்றும் அமேசான் போட்காஸ்ட், ஸ்போடிபை மூலம் பாடல்களை பதிவிறக்கம் செய்து கேட்கலாம். இதிலிருந்து பிற ஸ்பீக்கர்களை இணைக்கவும் முடியும். அலாரம், நினைவூட்டல், அமேசானில் ஆர்டர் போட்ட பொருட்கள் விவரம் உள்ளிட்டவற்றை இது அளிக்கும். இதன் விலை சுமார் ரூ.4,999.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com