பூக்களை புரிந்துகொள்வோம்..

மலர்களை இவ்வுலகில் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் பெண்களுக்கு மலர்கள் என்றால் அவ்வளவு விருப்பம்.
பூக்களை புரிந்துகொள்வோம்..
Published on

* தாவரங்களின் முக்கியமான இனப்பெருக்க உறுப்பு, பூக்கள். ஒரு தாவரத்தை ஆணா?, பெண்ணா? என்று அடையாளப்படுத்துவதும் பூக்களே.

* ஆண்பால் மலர்கள், பெண்பால் மலர்கள், இருபால் மலர்கள் என்று, பூக்களில் மூன்று வகை உண்டு.

* மகரந்ததாள்களை மட்டும் பெற்றவை, ஆண்பால் மலர்கள். சூலக வட்டத்தைப் பெற்ற மலர்கள், பெண்பால் மலர்கள். இரண்டையுமே பெற்றவை இருபால் மலர்கள்.

* பூக்களில், புல்லிவட்டம், அல்லிவட்டம், மகரந்ததாள், சூலக வட்டம் என நான்கு வட்டங்கள் காணப்படும். இவை நான்கும் பெற்ற பூக்களையே, முழுமையான மலர்கள் என்பர். இவற்றில் ஒருசில வட்டங்கள் குறைந்து காணப்படின் அவை முழுமையற்ற மலர்கள் என அழைக்கப்படும்.

* பூக்களைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவிற்கு புளேரிகல்கள் அல்லது ஆந்தோலஜி என்று பெயர்.

* பூக்களின் நிறத்திற்குக் காரணம் குரோமோபிளாஸ்ட்

* பல வண்ணங்கள் மற்றும் பல வடிவங்களில் பூக்கும் தாவர வகைகள், ஆர்கீட் தாவரங்கள்.

* உலகின் மிகப்பெரிய மலர் சந்தை - நெதர்லாந்தில் உள்ள ஆல்ஸ்மீர்.

* தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தை - கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை.

* கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில், மலர் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது.

* அரும்பு, நனை, முகை, மொக்குள், முகிழ், மொட்டு, போது, மலர், பூ, வீ, பொதும்பர், பொம்மல், செம்மல் ஆகியவை பூக்களின் பருவநிலை தமிழ்ப் பெயர்களாகும்.

* சங்க இலக்கியத்தில், கபிலர் என்னும் புலவர் 99 பூக்களின் பெயர்களை பதிவு செய்துள்ளார்.

* சேர மன்னர்கள் சூடியது பனம் பூ

* சோழ மன்னர்கள் சூடியது அத்திப்பூ

* பாண்டிய மன்னர்கள் சூடியது வேப்பம்பூ

* 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பூ குறிஞ்சிப் பூ

* குறிஞ்சிப் பூ, நீல நிறத்தில் பூத்துக் குலுங்கிய மலைப் பகுதிக்கு நீலகிரி என்று பெயர் வந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com