புதிய வண்ணத்தில் மஹிந்திரா தார்

மஹிந்திரா தார் மாடலில் வெள்ளை மற்றும் தாமிர வண்ணங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
புதிய வண்ணத்தில் மஹிந்திரா தார்
Published on

மஹிந்திரா நிறுவனத் தயாரிப்பில் தார் மாடல் மிகவும் பிரபலமானது. இந்த மாடலில் தற்போது வெள்ளை மற்றும் தாமிர வண்ணங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது 2 லிட்டர், 1.5 லிட்டர் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜினைக் கொண்டதாக வந்துள்ளது. இதன் ஆரம்ப விலை சுமார் ரூ.11 லட்சமாகும்.

இதில் 2 மற்றும் 4 சக்கர சுழற்சி கொண்ட மாடல்கள் உள்ளன. இதன் உள்புறம் 7 அங்குல தொடுதிரை இன்போடெயின் மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே உள்ளிட்ட வசதிகள் உள்ளன. குரூயிஸ் கண்ட்ரோல், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., ரியர் பார்க்கிங் சென்சார், இ.எஸ்.சி. உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com