

பூரண குணமடைந்து மீண்டு வந்ததும் அவர் அமைதியாகி விடுவார் என்று நினைத்தனர். அதன்பிறகுதான் மலாலாவின் செயல்பாடுகள் பன்மடங்கு அதிகரித்தன. பெண் கல்விக்கான தனது போராட்டத்தை உலக அளவில் விரிவுபடுத்தி பலரது கவனத்தையும் ஈர்த்தார். அவரது சேவையைப் பாராட்டி நோபல் பரிசும் வழங்கப்பட்டது. மிக இளம் வயதில் நோபல் பரிசு வென்ற பெருமையையும் பெற்றார்.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான அவர், தமது இளமைப் பருவத்தில் கல்வி மறுக்கப்பட்டதை நினைவு கூர்கிறார். பெண் கல்விக்காக அவர் எழுதிய புத்தகங்கள் பிரபலமானவை. சொந்தமாக பவுண்டேஷன் நடத்தி வருகிறார்.
பெண் கல்விக்காக தொடர்ந்து களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் மலாலா, ஆப்பிள் தொலைக்காட்சியுடன் இணைந்து சொந்தமாக நிகழ்ச்சிகளை தயாரிக்கவுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு முதலே ஆப்பிள் தொலைக்காட்சியுடன் மலாலா இணைந்து பணியாற்றி வருகிறார். அவரைப் பற்றிய ஆவணப்படத்தை ஆப்பிள் தொலைக்காட்சி வெளியிட்டது. மலாலாவின் பவுண்டேஷன் நடத்தும் ஆய்வுகளுக்கும் ஆப்பிள் தொலைக்காட்சி உதவி வருகிறது. தமது பவுண்டேஷன் மூலம் பெண் கல்விக்காகவும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும் நிதியுதவி அளித்து வருகிறார்.பெண்கள் கல்வி குறித்து கதை சொல்வதில் மலாலா ஏற்கனவே நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்கிறார். அவர் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்துக்கு அந்த அனுபவம் பேருதவியாக இருக்கும்.
சிறுவயதில் பள்ளிக்குச் செல்லவிடாமல் தான் தடுக்கப்பட்டதையும், அதை எதிர்த்து போராடியதால் தலீபான் படைகளால் சுடப்பட்டதையும், இங்கிலாந்தில் தஞ்சமடைந்ததையும் மலாலா தமது புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார். தற்போது, அவர் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மேலும் பல கதைகளையும், மற்ற பிரச்சினைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தொலைக்காட்சி தொகுப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ள மலாலா, தமது திட்டங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.
ஆப்பிள் தொலைக்காட்சியுடன் இணைந்து உண்மையான நிகழ்ச்சி நடத்தப் போவதை நினைத்து, நான் பிரமித்துப்போய் இருக்கிறேன். சமூகப் பிரச்சினைகளுக்கு நான் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளேன். இனியும் அந்த சேவை பணியை தொடர்வேன். ஆனால், இந்த நிகழ்ச்சியில் சமூகப் பிரச்சினைகளை மட்டும் பிரதானப்படுத்தப் போவதில்லை. நகைச்சுவை, நாடகம், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் என அனைத்து சுவாரசியங்களும் இருக்கும். பொழுதுபோக்கு துறைக்குள் என் கவனத்தைச் செலுத்த விரும்புகின்றேன். கலாசாரம் மற்றும் பரஸ்பர வாழ்க்கையை தெரிந்துகொள்ளும் இணைப்பாக இந்த நிகழ்ச்சி அமையும். குடும்பத்தோடும், நண்பர்களோடும் இந்த நிகழ்ச்சியைக் கண்டு களிப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.பிரச்சினைகளிலிருந்து நீங்களே வெளியே வருவதற்கான வழியை இந்த நிகழ்ச்சி சொல்லும். இந்த நிகழ்ச்சியைப் பார்க்க செலவிடும் நேரம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தாலும், பாலிவுட் திரைப்படங்களையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் அதிகம் பார்த்திருக்கிறேன்.பிரிட்டிஷ் தொலைக்காட்சிகளையும் பார்த்து வளர்ந்தேன். மிஸ்டர் பீன் நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்கும். என் குடும்பம் இங்கிலாந்து இடம்பெயர்ந்தபோது, நான் புதிய கலாசாரத்தைக் கற்றுக்கொண்டேன். மிஸ்டர் பீனைப் பற்றி பேசும் நண்பர்கள் எனக்குக் கிடைத்தார்கள்.
கார்ட்டூன் நெட்வொர்க்கிற்கு நான் பரம ரசிகை. கரேஜ் தி கோவர்ட்லி டாக் மற்றும் டாம் அண்ட் செர்ரி ஆகியவை எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த நிகழ்ச்சிகளின் ஒரு தொடரைக் கூட நான் தவறவிட்டதில்லை. உலகின் கடுமையான யதார்த்தங்களிலிருந்து இந்த நிகழ்ச்சிகள் என்னை விடுவிப்பதாக உணர்கிறேன்.கற்பனையான உலகத்துக்குள் சென்று, திரையில் வரும் வேடிக்கையான கதாபாத்திரங்களைப் பார்த்துச் சிரிக்கவும் முடிகிறது. சிறு வயதிலிருந்தே இந்த நினைவுகளை நான் விரும்புகிறேன்.கார்ட்டூன்கள் மட்டும் நான் பார்ப்பதில்லை. அனிமேஷன் படங்களையும் பார்ப்பேன். சமீபத்தில் வோப் வாக்கர் என்ற அனிமேஷன் திரைப்படத்தை பார்த்தேன். இதில் வரும் இரண்டு இளம்பெண்களின் சாகசப் பயணத்தை நான் மிகவும் விரும்பினேன். அவர்கள் தைரியமானவர்களாகவும் வலிமையானவர்களாகவும் இருந்தார்கள்.
அதோடு, தங்கள் குடும்பத்தைப் பாதுகாக்க விரும்புபவர்களாகவும் இருக்கிறார்கள். இது போன்ற படங்களை நாம் அவசியம் பார்க்க வேண்டும். சிறந்த அனிமேஷன் படங்களை நானும் உருவாக்குவேன் என்று நம்புகிறேன் என்பவர் பேச்சில் தனக்கு மறுக்கப்பட்ட கல்வியை, பெறுவதற்காக போராடியபோது எதிர்கொண்ட வலிகள் வார்த்தைகளாக வெளிப்படுகிறது.கல்விக்காக நான் நிறைய செலவழித்துள்ளேன். நான் கல்வி செயற்பாட்டாளர். கல்வி என்பது பள்ளிக்கூடத்தோடு நின்றுவிடக் கூடாது என்று நம்புகிறேன். கல்வி என்பது ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளது. நம் பெற்றோரிடம் கற்றுக் கொள்கிறோம்.தினமும் கிடைக்கும் அனுபவத்திலிருந்தும் கற்றுக்கொள்கிறோம். நாம் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் இருந்தும் கற்றுக்கொள்கிறோம். இந்தச் சமுதாயம் விரும்புவதையும், அதனைச் செய்யவும் நமக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உதவுகின்றன. அதேசமயம், நம் அன்றாட வாழ்க்கை நமக்குக் கற்றுத்தரும் பாடத்தின் வலிமையை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. அதனால்தான் என் நிறுவனத்துக்கு `எக்ஸ்ட்ராகரிகுலர் (பள்ளி, கல்லூரியில் பயிலுவதை விடக் கூடுதலாகக் கற்றுக் கொள்வது) என்று பெயர் வைத்துள்ளேன்.என் கதையை மக்கள் கேட்கும்போது, பெண் குழந்தைகள் கல்வி குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது. நான் சந்தித்த பிரச்சினை, எனக்கானது மட்டுமல்ல என்பதை எப்போதும் தெளிவுபடுத்தி வந்துள்ளேன். இந்த உலகத்தில் லட்சக்கணக்கான சிறுமிகளால் பள்ளிக்குப் போக முடியவில்லை.
அவர்களுக்கும் சேர்த்து குரல் கொடுப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்க விரும்பியதற்கு எனக்குப் பல காரணங்கள் இருந்தாலும், கதை சொல்வது என்பது விழிப்புணர்வு ஏற்படுத்தும் அளவுக்கும், அனைவரையும் ஒன்றிணைக்கும் அளவுக்கும் வலிமை பெற்றது என நினைக்கிறேன்.
கொரோனா பரவலுக்குப் பிறகு, 2 கோடி சிறுமிகள் கல்வியை இழந்ததைக் கண்டறிந்தேன். தங்கள் குடும்பத்தை பார்த்துக் கொள்ளவும், குடும்பத்துக்காக வருவாய் ஈட்ட வேண்டியும் இருந்ததால் அவர்களால் மீண்டும் பள்ளிக்குத் திரும்ப முடியவில்லை.வீட்டில் ஓர் ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருந்தால், ஆண் குழந்தைக்கு மட்டுமே கல்வி கற்பிக்கச் செலவழிக்கும் நிலையில் ஏழைகள் உள்ளனர்.ஏற்கெனவே, கல்வியை இழந்துவிட்டனர். இனியும் அந்தக் கல்வியை அவர்களால் எட்டிப் பிடிக்க முடியாது. இது குழந்தைகளுக்கு ஏற்பட்ட இழப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தின் பொருளாதாரத்துக்கும் ஏற்பட்ட இழப்பாகும் என்றார்.கொரோனா பரவலுக்குப் பிறகு, 2 கோடி சிறுமிகள் கல்வியை இழந்ததைக் கண்டறிந்தேன். தங்கள் குடும்பத்தை பார்த்துக் கொள்ளவும், குடும்பத்துக்காக வருவாய் ஈட்ட வேண்டியும் இருந்ததால் அவர்களால் மீண்டும் பள்ளிக்குத் திரும்ப முடியவில்லை.