மன்மோகன் சிங்கால் ராகுல் அரசியல் வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் இருக்காது என்பதால் பிரதமராக தேர்வு - ஒபாமா கருத்து

ராகுல் காந்திக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாததால் சோனியா காந்தி மன்மோகன் சிங்கைத் தேர்ந்தெடுத்தார் என அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது புத்தகத்தில் கூறி உள்ளார்.
மன்மோகன் சிங்கால் ராகுல் அரசியல் வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் இருக்காது என்பதால் பிரதமராக தேர்வு - ஒபாமா கருத்து
Published on

புதுடெல்லி

ராகுல் காந்திக்கு அரசியல் ரீதியாக எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது என்பதால் தான் சோனியா காந்தி, மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார் என அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தமது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புதிதாக வெளியிட்ட தனது அரசியல் நினைவுக் குறிப்பான "ஒரு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்" (The Promised Land)என்ற புத்தகத்தில் இந்திய அரசியல் தலைவர்கள் குறித்து குறிப்பிட்டு உள்ளார்.

அதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் பல தலைவர்கள் குறித்தும் அவர் கருத்து தெரிவித்து உள்ளார்.

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு 2009 முதல் 2017 வரை ஆட்சியில் இருக்கும் போது.ஒபாமா அமெரிக்கவின் அதிபராக இருந்தார்.

ஒபாமா தனது புத்தகத்தில் 1990 களில் இந்தியா அதிக சந்தை அடிப்படையிலான பொருளாதாரமாக மாறியது, இது பெரிய பொருளாதார வளர்ச்சிக்கும் நாட்டில் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்திற்கும் வழிவகுத்தது. "இந்தியாவின் பொருளாதார மாற்றத்திற்கான பிரதான காரணமாக பிரதமர் மன்மோகன் இருந்தார் என கூறி உள்ளார்.

சீக்கிய மத சிறுபான்மையினரில் மிக உயர்ந்த பதவிக்கு உயர்ந்தவர், ஊழல்குற்றச்சாட்டு இன்று நற்பெயரை சம்பாதித்து உள்ளார்.

மன்மோகன் சிங்கிற்கு தேசிய அளவில் எந்த விதமான அரசியல் பின்புலமும் கிடையாது என்பதும் சோனியாவின் முடிவுக்கு காரணம் என ஒபாமா எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு தகுதியானவராக ராகுலை வளர்க்கும் சோனியாவின் திட்டமும் மன்மோகனை தேர்வு செய்த முடிவின் பின்னால் இருந்தது என்பது ஒபாமாவின் கருத்து ஆகும்.

மும்பை தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்துவதற்கு அழைப்பு விடுத்ததை பிரதமர் சிங் எதிர்த்தார், ஆனால் அந்த முடிவு அவருக்கு அரசியல் சேதத்தை ஏற்படுத்தியது.

முஸ்லீம்-விரோத உணர்வு அதிகரித்து வருவது இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான இந்து தேசியவாத பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) செல்வாக்கை வலுப்படுத்துவதாக அவர் அஞ்சினார்.

இந்தியாவின் அரசியல் இன்னும் மதம், குலம் மற்றும் சாதியைச் சுற்றியே இருந்தது என்று ஒபாமா எழுதுகிறார். குறுங்குழுவாத பிளவுகளை முறியடிப்பதில் நாட்டின் முன்னேற்றத்தின் ஒரு அடையாளமாக அழைக்கப்பட்ட டாக்டர் சிங் பிரதமராக உயர்ந்தது உண்மையில் பெரிய விஷயம் என கூறி உள்ளார்.

முன்னாள் பிரதமர் சிங்கின் வீட்டில் ஒரு முறை சாப்பிட்ட விருந்தையும் ஒபாமா நினைவு கூர்ந்தார். இரவு விருந்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர் எனகூரி உள்ளார்.

சோனியா காந்தி குறித்து புத்தகத்தில் ஒபாமா கூறும் போது சோனியா காந்தி பேசியதை விட அதிகமாகக் கேட்டார், கொள்கை விஷயங்கள் வரும்போது சிங்கிடம் விட்டு விடுவதில் கவனமாக இருந்தார், மேலும் அடிக்கடி தனது மகனை நோக்கி உரையாடலைத் கேட்க தூண்டினார்" என்று அவர் கூறி உள்ளார்.

"இருப்பினும், சோனியாவுடைய சக்தி ஒரு வலிமையான புத்திசாலித்தனத்திற்குக் காரணம் இதுதான் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. ராகுலைப் பொறுத்தவரை, அவர் புத்திசாலி மற்றும் ஆர்வமுள்ளவராகத் தோன்றினார், அவரது அழகு அவரது தாயைப் போலவே இருந்தது. அவர் எதிர்காலத்தைப் பற்றிய தனது எண்ணங்களை முன்வைத்தார். ஆனால் அவரிடம் பதற்றம் இருந்தது, அவர் ஒரு மாணவராக இருப்பதால், அவர் பாடநெறியை வீட்டுப்பாடம் செசெய்து, ஆசிரியரைக் கவர ஆர்வமாக இருந்தவரைபோல் இருந்தார், ஆனால் ஆனால் அவர் எதிலும் ஆர்வமாக இல்லை என அதில் அவர் கூறி இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com