மேட்டர் ஏரா பேட்டரி மோட்டார் சைக்கிள்

மேட்டர் எனர்ஜி நிறுவனம் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பேட்டரியில் இயங்கும் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
மேட்டர் ஏரா பேட்டரி மோட்டார் சைக்கிள்
Published on

இதன் விலை சுமார் ரூ.1.44 லட்சம். இதில் பிரீமியம் மாடலின் விலை சுமார் ரூ.1.54 லட்சம். தற்போது இரண்டு வேரியன்ட்கள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன. இவற்றில் 5 கிலோவாட் அவர் பேட்டரி பயன் படுத்தப்பட்டுள்ளது.

இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 125 கி.மீ. தூரம் வரை ஓடும். கியர் வசதி கொண்ட முதலாவது பேட்டரி மோட்டார் சைக்கிளாக இது வந்துள்ளது. இதில் 4 கியர்கள் உள்ளன. லிக்விட் கூல்டு மோட்டாரைக் கொண்டுள்ளது. இது 10.5 கிலோவாட் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

முன்புறம் 7 அங்குல திரை புளூடூத் இணைப்பு வசதியுடன் வந்துள்ளது. பார்க் அசிஸ்ட், சாவியில்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி கொண்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com