மைக்ரோசாப்ட் சர்பேஸ் லேப்டாப் கோ 2

மைக்ரோசாப்ட் நிறுவனம் சர்பேஸ் லேப்டாப் கோ 2 மாடலை அறிமுகம் செய்துள்ளது.
மைக்ரோசாப்ட் சர்பேஸ் லேப்டாப் கோ 2
Published on

இது 12.4 அங்குல பிக்ஸெல் சென்ஸ் தொடு திரையைக் கொண்டுள்ளது. இதில் விண்டோஸ் 11 இயங்குதளம் உள்ளது. பிரீமியம் வடி வமைப்பைக் கொண்டதாக வந்துள்ளது. அத்துடன் இதில் மேம்பட்ட ஹெச்.டி. கேமராவும் உள்ளது. இரண்டு மைக்ரோபோன் உள்ளதால் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை எளிதாக மேற்கொள்ள முடியும். விரல் ரேகை உணர் சென்சார் வசதி கொண்டது. இதன் எடை 1.12 கிலோவாகும்.

இதில் 11-வது தலைமுறை குவாட் கோர் இன்டெல் ஐ 5 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அலுமினியம் மேல்பாகம் கொண்டது. இது 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்டதாக வந்துள்ளது. யு.எஸ்.பி. டைப் சி போர்ட், ஏ போர்ட், ஆடியோ ஜாக் உள்ளிட்ட இணைப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 13 மணி நேரம் தொடர்ந்து செயல்படும். இதன் விலை சுமார் ரூ.79,090.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com