பழைய என்ஜினில் ஓடும் நவீன பைக்

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ருஸ்பே. பொறியியல் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இவருக்கு ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் அதிகம். அதற்காக என்ன செய்திருக்கிறார் தெரியுமா...? பழைய காரின் என்ஜினை கொண்டு நவீன பைக் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.
பழைய என்ஜினில் ஓடும் நவீன பைக்
Published on

கடந்த 2016-ம் ஆண்டு பி.டெக் படிக்கும்போதே பைக் வடிவமைப்பு பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். பழைய மாருதி 800 காரின் என்ஜினை விலைக்கு வாங்கி, அதில் சிலவற்றை மாற்றியமைத்து, பைக் உருவாக்கும் திட்டத்தை முன்னெடுத்தார். அது 3 ஆண்டுகளில் முழு வடிவம் பெற்றிருக்கிறது. இவர் வடிவமைத்திருக்கும் ஹேமர்ஹெட் 800 (Hammerhead 800) என்ற பைக் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்த பைக் மற்ற பைக் வாகனங்களில் இருந்து முற்றிலும் வேறுபடுகிறது. அளவில் பெரிதாக காட்சியளிக்கும் இந்த பைக்கில், கார் டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முழுவதும் மாருதி காரின் என்ஜின் மூலமாகவே செயல்படுகிறது. இதைப் பாராட்டி இளைஞர் ருஸ்பேவிற்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார். இந்த மோட்டார் சைக்கிள் வடிவமைப்புக்கு காப்புரிமையும் கோரியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com