

அரிசோனா,
கடந்த 30 ஆண்டுகளில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான கடல் ஆமைகள் வேட்டையாடப்பட்டுள்ளன என அரிசோனா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு புதிய ஆய்வில் கூறியுள்ளனர்.
1990 முதல் 2020 வரையிலான கடந்த 30 ஆண்டுகளில், கடல் ஆமைகள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு கொல்லப்படுகின்றன.
65 நாடுகளில், ஆண்டுக்கு 44,000 கடல் ஆமைகள் கொல்லப்படுகின்றன. கடல் ஆமைகளை பிடிப்பதையும் பயன்படுத்துவதையும் தடைசெய்யும் சட்டங்கள் இருந்த போதிலும் இத்தகைய சட்டவிரோத செயல்கள் நடந்து வந்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, கடல் ஆமைகள் அவற்றின் இறைச்சி மற்றும் ஓடுகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன மற்றும் அவற்றின் பாகங்கள் நகைகள், கலைப்பொருட்கள் மற்றும் பாரம்பரிய மருந்துகளை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.
சட்டவிரோதமாக செயல்பட்டு வரும், வனவிலங்கு வர்த்தகம், ஆண்டுக்கு 23 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள வணிகமாக மாறியுள்ளது. அதில் ஆமை வேட்டை மற்றும் கடத்தல் உட்பட பல வனவிலங்குகள் கொல்லப்படுகின்றன.
எனினும், கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட பல பாதுகாப்பு சட்டங்கள் மூலம், கடல் ஆமைகளை சட்டவிரோதமாக சுரண்டுவது 28 சதவீதம் குறைந்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.