

சென்னை
4,896 பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களில் 4,852 உறுப்பினர்களின் தேர்தல் ஆணைய அபிடவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. ஜனநாயக சீர்திருத்த சங்கம் பாராளுமன்ற மொத்த எம்.பி.க்களில் 776 பேரது அபிடவிட்டில் 774 அபிடவிட் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 4,120 ஆகும். இவர்களில் 4,078 எம்.எல்.ஏ.க்களின் தேர்தல் ஆணைய அபிடவிட் பரிசோதனை செய்யப்பட்டது. 1,581(33 சதவிதம்) எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் உள்ளது. 51 உறுப்பினர்கள் தங்களுக்கு எதிராக பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளதாக அபிடவிட்டில் குறிப்பிட்டு உள்ளனர் என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தலில் போது அரசியல் கட்சிகள் தரப்பில் நிறுத்தப்பட்டவர்கள் தாக்கல் செய்த அபிடவிட்டை ஆய்வு செய்ததில் அதிகமானோர் மீது பெண்களுக்கு எதிரான வழக்குகள் உள்ளது என்பதை காட்டுகிறது எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
லோக்சபாவில் உள்ள 542 எம்பிக்களில் 179 பேர் ( 33 சதவீதம்) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது. இதில் 114 பேர் (21 சதவீதம் )மீது தீவிர கிரிமினல் வழக்குகள் உள்ளன. 228 ராஜ்யசபா எம்பிக்களில் 51 பேர் ( 22 சதவீதம் ) வழக்குகள் உள்ளது. இதில் 20 பேர் ( 9 சதவீதம் ) மீது தீவிர கிரிமினல் வழக்குகள் உள்ளன.
பாரதீய ஜனதாவில் உள்ள 339 எம்பிக்களில் 107 பேர் மீது கிரிமினல் வழக்குகளும், 64 பேர் மீது தீவிர கிரிமினல் வழக்குகளும் உள்ளன.
காங்கிரசில் உள்ள 97 எம்பிக்களில் 15 பேர் கிரிமினல் வழக்குகளும், 8 பேர் மீது தீவிர கிரிமினல் வழக்குகளும் உள்ளன. சிவசேனாவில் உள்ள 21 எம்பிக்களில் 18 பேர் மீது கிரிமினல் வழக்குகளும், 10 பேர் மீது தீவிர கிரிமினல் வழக்குகளும் உள்ளன.
அ.திமுக எம்பிக்கள் 50 பேரில் 10 பேர் மீது கிரிமினல் வழக்குகளும் 3 பேர் மீது தீவிர கிரிமினல் வழக்குகளும் உள்ளன. திமுகவில் உள்ள 4 எம்பிக்களில் 2 பேர் மீது கிரிமினல் வழக்குகளும் ஒருவர் மீது தீவிர வழக்குகளும் உள்ளன.
தற்போது உள்ள எம்.எல்.ஏக்களில் முதல் இடத்தில் ஜார்கண்ட் உள்ளது. அங்குள்ள 80 எம் எல் ஏக்களில் 50 பேர் மீது கிரிமினல் வழக்குகளும் , 39 பேர் மீது தீவிர கிரிமினல் வழக்குகளும் உள்ளன.
இரண்டாவது இடத்தில் கேரளா உள்ளது. அங்குள்ள 139 எம்.எல்.ஏக்களில் 86 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது. 26 பேர் மீது தீவிர கிரிமினல் வழக்குகள் உள்ளது. தமிழ் நாட்டில் 225 எம் எல் ஏக்களில் 75 பேர் கிரிமினல் வழக்குகளும் 43 பேர் மீது தீவிர கிரிமினல் வழக்குகளும் உள்ளன. தொடர்ந்து பீகார், மகாராஷ்டிரா, தெலுங்கானா ஆந்திரா உள்ளது. 12 வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. மிசோரத்தில் உள்ள 39 எம்.எல்.ஏக்களில் யார் மீதும் வழக்குகள் இல்லை.
பாரதீய ஜனதாவில் உள்ள 1451 எம்.எல்.ஏக்களில் 451 பேர் மீது கிரிமினல் வழக்குகளும், 295 பேர் மீது தீவிர கிரிமினல் வழக்குகளும் உள்ளன.அடுத்த இடத்தில் காங்கிரஸ் உள்ளது. தி.மு.க எம்.எல்.ஏகள் 90 பேரில் 44 பேர் மீது கிரிமினல் வழக்குகலூம் , 29 பேர் மீது தீவிர கிரிமினல் வழக்குகளும் உள்ளன.
அ. தி.மு.க எம்.எல்.ஏகள் 132 பேரில் 28 பேர் மீது கிரிமினல் வழக்குகளும்,16 பேர் மீது தீவிர கிரிமினல் வழக்குகளும் உள்ளன.
பாலியல் பலாத்காரம் மற்றும் கடத்தல் என 51 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக வழக்குகள் உள்ளது என மொத்தம் 48 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 3 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளது. கட்சி வாரியாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டு உள்ளது. இதில் பாரதீய ஜனதாவே முதலிடத்தில் உள்ளது.
பாரதீய ஜனதாவை சேர்ந்த 12 உறுப்பினர்களுக்கு எதிராக பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளது. அடுத்தப்படியாக சிவசேனாவும் (7 உறுப்பினர்கள்), திரிணாமுல் காங்கிரசும் (6 உறுப்பினர்கள்) உள்ளது. மாநில வாரியாக மராட்டியம் 12 உறுப்பினர்களுடன் முதலிடத்தில் உள்ளது, அடுத்தப்படியாக மேற்கு வங்காளம் 11 உறுப்பினர்களையும், ஒடிசா 6 உறுப்பினர்களையும் கொண்டு உள்ளது என தெரியவந்து உள்ளது.
பெண்களை தாக்குதல், கடத்துதல், கடத்தி திருமணம் செய்ய வலியுறுத்துதல், பாலியல் பலாத்காரம், பெண்ணின் கணவர் மற்றும் அவருடைய உறவினர்களை துன்புறுத்துதல், பாலியல் தொழிலுக்காக சிறுமிகளை வாங்குதல் உள்ளிட்ட வழக்குகள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக உள்ளது என ஆய்வில் தெரியவந்து உள்ளது.