

கொல்கத்தாவைச் சேர்ந்த மியூலோ டெக்னாலஜீஸ் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏரினா 6000 சவுண்ட் பாரை அறிமுகம் செய்துள்ளது. இது 2.1 சேனல் சப் ஊபரைக் கொண்டுள்ளது. இந்த சவுண்ட்பாரின் 95 சதவீத பாகங்கள் உள்நாட்டில் கொள்முதல் செய்யப்பட்டவையாகும். மிகச் சிறப்பான ஒலியை வெளிப்படுத்துவதால் இதை டி.வி. மற்றும் மினி தியேட்டரில் இணைத்து பயன்படுத்தலாம். மிகவும் உயர் தரத்திலான மரத்தினால் ஆன மேல்பாகம் கொண்டது.
இது எதிரொலி ஏற்படுத் தாத வகையில் துல்லியமான இசையை வழங்க உதவுகிறது. இது 60 வாட் திறன் கொண்டது. இதை புளூடூத் மூலமும் இணைக்கலாம். டெலிவிஷன் கேபிள் மூலமும் இணைக்க முடியும். ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப், மியூசிக் பிளேயர் போன்றவற்றுடன் இணைக்க முடியும். இதை எம்.பி. 3 பிளேயராகவும் பயன்படுத்த முடியும். இதற்கென யு.எஸ்.பி. போர்ட் உள்ளது.
இதில் உள்ளீடாக பண்பலை ரேடியோ இணைப்பு உள்ளது. இதன் மூலம் உள்ளூர் மொழியில் பாடல்களை, நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ளலாம்.ரிமோட் கண்ட்ரோல் மூலமும் இதை செயல்படுத்தலாம். இதன் விலை சுமார் ரூ.4,999.