நபார்டு வங்கியில் வேலை

விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியில் (நபார்டு) கிரேடு ஏ பிரிவில் உதவி மானேஜர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நபார்டு வங்கியில் வேலை
Published on

பல்வேறு பணி பிரிவுகளில் மொத்தம் 170 பேர் நியமிக்கப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது 2-7-1982 அன்றைய தேதிக்கு முன்போ, 1-7-1997 அன்றைய தேதிக்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது.

கல்லூரி படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் வெற்றி பெறுபவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 7-8-2022.

https://ibpsonline.ibps.in/nabargaul22/ என்ற இணைய பக்கத்தின் வழியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com