

இது 1.75 அங்குல முழு எல்.சி.டி. திரையைக் கொண்டது. 100 வகையான விளையாட்டுகளில் எதில் ஈடுபட்டாலும் அதில் உங்களது உடலில் எரிக்கப்படும் கலோரி அளவை துல்லியமாகக் காட்டும்.
இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, தூக்க குறைபாடு ஆகியவற்றைக் காட்டும். பெண்களின் உடலியல் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் தண்ணீர் அருந்துவதை உணர்த்தும். கருப்பு, கிரே, ஆலிவ் பச்சை நிறங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.3,499.