நாய்ஸ் கலர்பிட்லூப் ஸ்மார்ட் கடிகாரம்

நாய்ஸ் நிறுவனம் புதிதாக கலர்பிட் லூப் என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
நாய்ஸ் கலர்பிட்லூப் ஸ்மார்ட் கடிகாரம்
Published on

புளூடூத் 5.3 இணைப்பு வசதி கொண்டது. இதில் 1.85 அங்குல டி.எப்.டி. எல்.சி.டி. திரை உள்ளது. கண் கூசாத வகையில் பிரகாசமாக எழுத்துகள் பளிச்சிடும்.

இதில் சிங்க் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 130-க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி சார்ந்த விளையாட்டுகளில் நீங்கள் எதில் ஈடுபட்டாலும், உடலில் எரிக்கப்படும் கலோரி அளவைத் துல்லியமாகக் காட்டும். இதய துடிப்பு, மகளிர் உடல் நலன் சார்ந்த பிரச்சினைகள், தூக்க குறைபாடு, சுவாசம் உள்ளிட்ட தகவல்களை துல்லியமாக பதிவிடும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை செயல்படும் வகையில் 390 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

கருப்பு, பச்சை, நீலம், கிரே, வெள்ளை, இளம் சிவப்பு உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ள இந்த கடிகாரத்தின் விலை சுமார் ரூ.2,499.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com