

நோக்கியாவின் 110 மாடல் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 4-ஜி அலைக்கற்றையில் செயல்படும். இதன் விலை சுமார் ரூ.2,799. மஞ்சள், நீலம், கருப்பு நிறங்களில் இது கிடைக்கும். வயர்லெஸ் மற்றும் வயர் பண்பலை வானொலி வசதி, இண்டர்நெட் இணைப்பு வசதி கொண்டது.
வீடியோ மற்றும் எம்.பி. 3 பிளேயர் உள்ளது. இதன் நினைவகத் திறனை 32 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்ய முடியும். விலை குறைவான 4-ஜி செல்போனாக கேமரா வசதியுடன் இது வந்துள்ளது. 1020 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. அழகிய வடிவமைப்பு கொண்டது.