நோக்கியா சி 30

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா பிராண்டில் சி 30 ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
நோக்கியா சி 30
Published on

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா பிராண்டில் சி 30 ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. சி பிரிவில் இது புதிய வரவாகும். இது 6.82 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டது. இதில் யுனிசாக் எஸ்.சி 9863 ஏ பிராசஸர் உள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளது. பின்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 5 மெகா பிக்ஸெல் கேமராவும் கொண்டது. பாலி கார்பனேட் மேல் பகுதியையும் கொண்டது.

இதில் 6 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன் படுத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 நாட்கள் வரை செயல்படும். இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் வந்துள்ளது. 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.10,999. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.11,999.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com