"உனக்கு இது பிடிக்குமா?" மோசடி மன்னன் சுகேஷ் நடிகையுடனான உரையாடல் கசிந்தது

சுகேஷ் வழக்கு விவகாரத்தில் அதிரடி திருப்பங்களும், புதுப்புது தகவல்களும் தினந்தோறும் வெளியாகி வருகிறது.
"உனக்கு இது பிடிக்குமா?" மோசடி மன்னன் சுகேஷ் நடிகையுடனான உரையாடல் கசிந்தது
Published on

புதுடெல்லி

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்பு இருப்பதாக கூறி இவர் தொழில் அதிபர்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார்கள் உள்ளன.

அ.தி.மு.க. பிளவுபட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டி.டி.வி.தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.

அவர் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இருப்பதாக மத்திய அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரின் சென்னை, பெங்களூரு பங்களாக்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத 2 கிலோ தங்கம், ரூ.82.5 லட்சம் ரொக்கம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையே சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பாக அவரது காதலி லீனா மரியாவிடமும், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் பண மோசடி வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

பண மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் உள்பட 6 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில் சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ரூ. 10 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த பரிசு பொருட்களை கொடுத்தது குறிப்பிடப்பட்டு இருந்தது.சுகேஷ் சந்திரசேகர் நடிகையின் விமானம், அவரது ஓட்டல் மற்றும் உணவுக்காக பல கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறப்படுகிறது.

சுகேஷ் வழக்கு விவகாரத்தில் அதிரடி திருப்பங்களும், புதுப்புது தகவல்களும் தினந்தோறும் வெளியாகி வருகிறது.

இதே போல நடிகை நோரா பதேஹிக்கும் சுகேஷுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தெரியவந்த நிலையில் நடிகையை நேரில் அழைத்து அமலாக்கத்துறையினர் விசாரித்தனர்.

இந்நிலையில், தற்போது நோரா பதேஹி அமலாக்கத்துறை தரப்பு சாட்சியாக மாறி விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கனடாவைச் சேர்ந்த மாடல் அழகியான நோரா பதேஹி அமலாக்கத்துறையினரின் விசாரணையில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். சுகேஷ் சந்திரசேகர் தனக்கு பிஎம்டபிள்யூ கார் ஒன்றையும், அவரின் மனைவியும் நடிகையுமான லீனா மரியா பால் தனக்கு விலையுயர்ந்த பேக் ஒன்றையும் பரிசளித்ததாக தெரிவித்திருக்கிறார்.

மேலும். கடந்த 2020 டிசம்பரில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்குமாறு லீனா மரியா பால் தனக்கு அழைப்பு விடுத்திருந்ததாக நடிகை நோரா தெரிவித்திருக்கிறார்.

இப்போது, நோரா பதேஹி சுகேஷ் இடையே நடைபெற்ற ரேஞ்ச் ரோவர் கார்பற்றி பற்றி விவாதிக்கும் அரட்டை கசிந்துள்ளது.

"உனக்கு இது பிடிக்குமா?" சுகேஷ் சந்திரசேகர் நோரா பதேஹியிடம் ரேஞ்ச் ரோவர் பற்றி கேட்கிறார்.

"ஆம், இது ஒரு நல்ல கரடுமுரடான கார். இது அழகாக இருக்கிறது, இது ஒரு ஸ்டேட்மென்ட் கார்" என்று நோரா பதிலளிக்கிறார்.

"நான் உங்களுக்கு நீங்கள் விரும்பியதை கொடுப்பேன் என பதேஹியிடம் சுகேஷ் கூறுகிறார். என இந்த அரட்டை செல்கிறது

மேலும் சுகேஷ் சந்திரசேகர் தனக்கு 2015 ஆம் ஆண்டு முதல் ஷ்ரத்தா கபூரைத் தெரியும் என்றும், போதைப்பொருள் சர்ச்சைக்குப் பிறகு போதைபொருள் தடுப்பு முகமை விசாரணையின் போது அவருக்கு உதவி செய்வதாக கூறியதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. இது தவிர, கணவர் ராஜ் குந்த்ரா சிறையில் இருந்தபோது ஷில்பா ஷெட்டியை அணுகியதாகவும் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com