இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினர் ஏழைகளாக இரண்டு மடங்கு உயர்ந்து உள்ளனர்-ஆய்வில் தகவல்

இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினர் 3 மடங்கு சரிந்து ஏழைகள் இரண்டு மடங்காக உயர்ந்து உள்ளனர்என ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினர் ஏழைகளாக இரண்டு மடங்கு உயர்ந்து உள்ளனர்-ஆய்வில் தகவல்
Published on

புதுடெல்லி

2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினர் (தினசரி வருமான ரூ. 725 முதல் ரூ1,450). மூன்றில் ஒரு பங்காக சுருங்கிவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தொற்றுநோயால் தூண்டப்பட்ட மந்தநிலையால் நாட்டின் ஏழைகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது என்று வாஷிங்டனை தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற பியூ ரிசர்ச் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொற்றுநோய்க்கு முன்னர், 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் 9.9 கோடி மக்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று மதிப்பிடப்பட்டது. பியூவின் ரிசர்ச் கூற்றுப்படி, இந்த எண்ணிக்கை இப்போது 6. 6 கோடியாக அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வீழ்ச்சியின் விளைவாக, இந்தியாவின் நடுத்தர வர்க்கம் 3.2 கோடிக்கும் அதிகமாக குறைந்து உள்ளது. இது நடுத்தர வருவாய் அடுக்கில் உள்ள மக்களின் எண்ணிக்கையில் உலகளாவிய அளிவில் 60 சதவீத சரிவு ஆகும் .

கொரோனா மந்தநிலையின் காரணமாக இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை (தினசரி வருமானம் ரூ. 145 அல்லது அதற்கும் குறைவாக) 7.5 கோடியாக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் உலக வறுமை அதிகரிப்பில் கிட்டத்தட்ட 60 சதவீதமாகும் .

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் வேலைக்கான கோரிக்கை அதன் தொடக்கத்திலிருந்து மிக அதிகமாக உள்ளது என்று அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 13.4 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது மந்தநிலைக்கு முன்னர் மதிப்பிடப்பட்ட 5.9 கோடிக்கும் அதிகமாகும்.

உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கை இந்தியாவும் சீனாவும் ஒன்றாகக் கொண்டிருப்பதால், பியூ ரிசர்ச் இரு நாடுகளையும் ஒன்றாகப் ஆய்வு செய்தது. இந்தியா ஆழ்ந்த மந்தநிலையில் மூழ்கியிருந்தது. சீனாவால் அதன் மந்த நிலையில் இருந்து வெகு விரைவில் திரும்ப முடிந்தது.

தொற்றுநோய்க்கு முன்னர், 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (5.8 சதவீதம்), சீனாவில் (5.9 சதவீதம்) உலக வங்கி கிட்டத்தட்ட சமமான வளர்ச்சியை மதிப்பிட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு பின் இது இந்தியாவுக்கு மைனஸ் 9.6 சதவீதமாகவும் சீனாவுக்கு 2 சதவீதம் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com