இளைஞர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு

கொரோனா வைரஸ் ஏற்படுத்தி இருக்கும் நெருக்கடியால் பல தரப்பினரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
இளைஞர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு
Published on

வயதானவர்கள்தான் அதிக நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாக பரவலான கருத்து நிலவுகிறது. ஆனால் உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 50 சதவீதம் இளைஞர்கள் மனச்சோர்வு, பதற்றம் போன்ற பாதிப்புக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு 112 நாடுகளில் ஆய்வு நடத்தி இருக்கிறது. ஆய்வில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே 18 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள். வேலைவாய்ப்பு, கல்வி, மனநலம், உரிமைகள் மற்றும் சமூக செயல்பாடுகள் தொடர்பாக இளைஞர்களின் எண்ண ஓட்டத்தை மதிப்பிடும் நோக்கத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர், தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள், வேலை பார்க்கும் அலுவலகங்கள் கொரோனா ஊடரங்கு காலத்தில் மூடப்பட்டதால் தனிமையுடன் கூடிய மனச்சோர்வு, பதற்றத்தை அனுபவித்ததாக குறிப்பிட்டிருக்கிறார்கள். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு உயர்கல்வி பயிலு வதற்கு கல்லூரி செல்லும் நாட்களை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். வீட்டிலேயே முடங்கி கிடந்து ஆன்லைன் கல்வி பயிலும் மாணவர் களும் ஏமாற்றத்தை உணர்வதாக கூறி இருக்கிறார்கள்.

ஆன்லைன் கல்வி மற்றும் தொலைதூர கல்வி சூழலுக்கு சட்டென்று மாற முடியாத மன நிலையில் இருப்பதாக 73 சதவீத இளைஞர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 51 சதவீதம் பேர் கல்வி கற்பது தாமதமாகும் என்று எண்ணுகிறார்கள். 9 சதவீதம் பேர் தங்களின் படிப்பு பாதிப்புக்குள்ளாகும் என்று அஞ்சுகிறார்கள். ஆன்லைன் கல்வி பயின்றாலும் கொரோனா நெருக்கடியால் முழுமையாக கவனம் செலுத்தி படிக்கமுடியவில்லை என்று 65 சதவீத மாணவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். வீட்டில் இருந்தபடியே கல்வி கற்கும் நடைமுறை புது அனுபவமாக இருப்பதாகவும், ஆனால் பள்ளி, கல்லூரி சூழலை உணரமுடியவில்லை என் றும் கூறி இருக்கிறார்கள். குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் இளைஞர்களின் வேலை நேரம் குறைந்துள்ளதாகவும், அதன் விளைவாக வருமானம் குறைந்திருப்பதாகவும் சர்வே குறிப்பிடுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com