அசத்தல் நடனம் ஆடி புதிய அம்சங்களை வெளியிட்ட ஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வால்! வைரல் வீடியோ

ஓலா நிறுவனத்தின் உரிமையாளரான பாவிஷ் அகர்வால், டுவிட்டரில் கலக்கலாக நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அசத்தல் நடனம் ஆடி புதிய அம்சங்களை வெளியிட்ட ஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வால்! வைரல் வீடியோ
Published on

மும்பை,

ஓலா நிறுவனத்தின் உரிமையாளரான பாவிஷ் அகர்வால், டுவிட்டரில் கலக்கலாக நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ  வைரலாகியுள்ளது.

சமீப காலமாக, ஓலா வாகனம் தீ பிடித்து எறிந்த சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஓலா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக இருந்த பாவிஷ் அகர்வால், தனது சிஇஓ பொறுப்புகளை விடுத்து தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றத் துவங்கியுள்ளார்.

மேலும், ஓலா நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தொழில்நுட்ப மேம்பாடுகளில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் ஓலா உருவாக்கி வரும் புதிய தொழில்நுட்பமான  மூவ் ஓஎஸ் 2.0வில், இதுவரை இந்த இரு சக்கர வாகனங்களில் இல்லாத பல சேவைகள் கொண்டு வரப்போவதாக ஓலா அறிவித்திருந்தது. அதற்கான முன்னோட்டத்தை பாவிஷ் அகர்வால், நடனமாடி  தனது வாடிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அந்த  மென்பொருளில் நேவிகேஷன், மியூசிக் போன்ற பல சேவைகள் இருப்பதாகவும், இந்த மென்பொருள் ஓலா எஸ்1 ப்ரோ வாகனங்களுக்கு மட்டும் பகுதி பகுதியாக அளிக்கப்படும் என்றும் ஓலா எலக்ட்ரிக் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

ஓலா நிறுவனத்தின் புதிய மென்பொருள் சேவையில், ஸ்பீக்கர் மூலம் பாட்டு கேட்கும் வசதி இருப்பதை விளக்கும் வகையில், புதிய மென்பொருள் அப்டேட் கொண்ட ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரில் பாட்டு ஒலிக்கப்பட்டது. அதற்கு பாவிஷ் அகர்வால் தனது சக ஊழியர ஒருவருடன் நடனம் ஆடி  வீடியோ பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com