ஒன்பிளஸ் நார்ட் 2 டி

ஒன்பிளஸ் நிறுவனம் நார்ட் 2 டி மாடல் ஸ்மார்ட்போனை புதிதாக அறிமுகம் செய்துள்ளது.
ஒன்பிளஸ் நார்ட் 2 டி
Published on

கடந்த ஆண்டு நார்ட் 2 மாடல் அறிமுகம் செய்யப் பட்டது. அதன் மேம்பட்ட மாடலாக 2 டி இப்போது அறிமுகமாகியுள்ளது.இது 6.43 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் திரவ அமோலெட் திரையைக் கொண்டது.

இதில் ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிடி 1300 6 என்.எம். பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டதாகவும், 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்டதாகவும் மாடல்கள் வந்துள்ளன. ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் இதில் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. இதன் எடை 190 கிராம். 4500 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 80 வாட் சூப்பர் வூக் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.28,999.

இதில் 12 ஜி.பி. ரேம் உள்ள மாடல் விலை சுமார் ரூ.33,999.

X

Daily Thanthi
www.dailythanthi.com