ஒன்பிளஸ் ஸ்மார்ட் டி.வி.

ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஒன் பிளஸ் நிறுவனம் 50 அங் குலம், 55 அங்குலம் மற்றும் 65 அங்குல அளவுகளில் 4-கே ரெசல்யூஷனைக் கொண்ட டி.வி.யை அறிமுகம் செய்து உள்ளது.
ஒன்பிளஸ் ஸ்மார்ட் டி.வி.
Published on

இதில் எம்.இ.எம்.சி. தொழில்நுட்பம் உள்ளது. இது காட்சிகள் துல்லியமாகத் தெரிய ஏதுவாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வண்ணக் கலவையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரிமோட் தேவைப்படாத குரல் வழி கட்டுப்பாட்டில் இந்த டி.வி.க்களை செயல்படுத்த முடிவது கூடுதல் சிறப்பம்ச மாகும். கூகுள் அசிஸ்டென்ட், அமேசான் அலெக்ஸா ஆகியவற்றின் உதவியோடு இதை இயக்கலாம்.

மேலும் டி.வி. பார்ப்பவர் தூங்கி விட்டால் தானாகவே அணைந்து விடும். இதற்கேற்ப ஸ்மார்ட் ஸ்லீப் கண்ட்ரோல் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஸ்மார்ட்போனையே ரிமோட்டா கவும் பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உள்ளது. இதில் 30 வாட் ஸ்பீக்கர் உள்ளது. 50 அங்குல டி.வி. மாடல் விலை சுமார் ரூ.39,999. 55 அங்குல மாடல் விலை சுமார் ரூ.47,999, 65 அங்குல மாடல் விலை சுமார் ரூ.62,999.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com