ஓப்போ ஏ 77 ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் சர்வதேச அளவில் பிரபலமான ஓப்போ நிறுவனம் ஏ 77 மாடல் போனை அறிமுகம் செய்துள்ளது.
ஓப்போ ஏ 77 ஸ்மார்ட்போன்
Published on

இது 6.56 அங்குல ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. திரையைக் கொண்டுள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.17,999.

இதில் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 680 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு சிம்கார்டு போடும் வசதி கொண்டது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும் கொண்டது. 5 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்ய முடியும். நீண்ட நேரம் செயல்பட வசதியாக 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 33 வாட் சூப்பர்வூக் சார்ஜருடன் வந்துள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் கொண்டது. கருப்பு, ஆரஞ்சு ஆகிய கண்கவர் வண்ணங்களில் கிடைக்கும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com