இந்தியாவில் 4 பேரில் ஒருவர் இளைஞர்

இந்தியாவின் மொத்த மக்கள்தொகை தற்போது 147 கோடியாக உள்ளது. 141 கோடி மக்கள்தொகையுடன் சீனா 2-வது இடத்தில் இருக்கிறது.
இந்தியாவில் 4 பேரில் ஒருவர் இளைஞர்
Published on: 

இந்திய மக்கள் தொகையில் 10 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் 26 சதவீதம் உள்ளனர். அதாவது, 4 பேரில் ஒருவர் இந்த வயதுப் பிரிவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் மக்கள்தொகை, இளைஞர்களின் எதிர்காலம், குழந்தை பெற்றுக்கொள்ளும் விருப்பம், பெண்களின் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஐ.நா. மக்கள் தொகை நிதியம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியர்கள் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இளைஞர்கள் அதிகம்

இந்தியாவின் மொத்த மக்கள்தொகை தற்போது 147.66 கோடியாக உள்ளது. 141.29 கோடி மக்கள்தொகையுடன் சீனா 2-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் மக்கள்தொகை இரட் டிப்பாக 81 ஆண்டுகள் ஆகும் என்றும் ஐ.நா.வின் அறிக்கை கணித்துள்ளது. இந்திய மக்கள் தொகையில் 10 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் 26 சதவீதம் உள்ளனர். அதாவது, 4 பேரில் ஒருவர் இந்த வயதுப் பிரிவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 14 வயதுடையவர்கள் 24 சதவீதம், 10 முதல் 19 வயதுடையவர்கள் 17 சதவீதம், 15 முதல் 64 வயதுடையவர்கள் 69 சதவீதம் உள்ளனர். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 8 சதவீதமாக உள்ளனர்.

இதன் மூலம் இந்தியாவில் வேலை செய்யும் வயதுடையவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதும். இளைஞர்களின் பங்களிப்பு நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறுவதும் தெரியவருகிறது.

குழந்தை பெற்றுக்கொள்ளும் விருப்பம்

இந்தியாவில் குழந்தை பெற்றுக்கொள்வது மீதான விருப்பம் தொடர்ந்து அதிகமாக இருப்ப தாக அறிக்கை கூறுகிறது. 35 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் இதுவரை குழந்தை இல்லா தவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 85 சதவீதம் பேர் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளனர். மேலும், 18 முதல் 39 வயதுடைய பெண்கள் தங்களுக்கு ஏற்ற குடும்ப அளவாக சராசரியாக 2 குழந்தைகளை விரும்புவதாக கூறியுள்ளனர். அதே நேரத்தில், 35 முதல் 39 வயதுடைய பெண்களிடம் சராசரியாக ஒரு குழந்தை மட்டுமே இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவில் ஒரு பெண்ணுக்கு சராசரியாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 2 என்ற அளவில் உள்ளது. மக்கள்தொகை தொடர்ந்து ஒரே அளவில் இருக்க இந்த நிலை நீடிக்க வேண்டும்.

மகப்பேறு இறப்பு குறைந்தது

இந்தியாவில் மகப்பேறு காலத்தில் ஏற்படும் தாய்மார்களின் உயிரிழப்பு குறைந்துள்ளது. 2022-24 காலகட்டத்தில் ஒரு லட்சம் குழந்தைகள் உயிருடன் பிறக்கும்போது 87 தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவப் பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்களின் உதவியுடன் நடைபெறும் பிரசவங்க ளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2019-21 காலகட்டத்தில் 89.4 சதவீதமாக இருந்த இந்த எண்ணிக்கை, 2023-24-ல் 91.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பெண்களின் செல்போன் பயன்பாடு

இந்தியாவில் 64 சதவீத பெண்கள் தனிப்பட்ட செல்போன் வைத்துள்ளனர். நகர்ப்புறங்களில் 77.6 சதவீத பெண்களும், கிராமப்புறங்களில் 57.4 சதவீத பெண்களும் செல்போன் வைத்துள்ளனர். நகர்ப்புறம், கிராமப்புறம் இடையே டிஜிட்டல் வசதிகளில் உள்ள இடைவெளியை இது எடுத்துக்காட்டுகிறது.

அதேபோல், கடந்த 12 மாதங்களில் கணவர் அல்லது நெருங்கிய துணையால் வன்முறையை எதிர்கொண்டதாக தெரிவித்த பெண்களின் விகிதம் 29.2 சதவீதத்தில் இருந்து 22.3 சதவீதமா கக் குறைந்துள்ளது.

எதிர்காலம் குறித்து நம்பிக்கை

இந்தியாவில் 83 சதவீதம் பேர் தங்களுடைய எதிர்காலம் குறித்து நேர்மறையான அல்லது மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், போர், பொருளாதாரப் பாதுகாப்பின்மை. ஏற்றத்தாழ்வு போன்றவை குறித்து 47 சதவீதம் பேர் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் சுகாதாரம் மற்றும் வளர்ச்சித் துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட் டுள்ளதாக ஐ.நா. மக்கள் தொகை நிதியத்தின் இந்தியப் பிரதிநிதி ஆண்ட்ரியா எம்.வோஜ்னர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் விருப்பங்களையும், கருத்துகளையும் அறிந்து அதற்கேற்ப அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மொத்தத்தில், அதிக இளைஞர்களைக் கொண்ட இந்தியா அவர்களுக்குத் தரமான கல்வி. வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் சமமான வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கினால், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு இந்த இளைஞர் சக்தி மிகப்பெரிய பலமாக அமையும் என்பதே இந்த அறிக்கை உணர்த்தும் முக்கிய செய்தியாகும்.

X