அறைகள் இல்லா அரண்மனை

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ‘ஹவா மகால்’ என்ற அரண்மனை, ஐந்து தளங்களுடன், எண்ணற்ற ஜன்னல் களுடன் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும்.
அறைகள் இல்லா அரண்மனை
Published on

ஆனால் இதன் உள்ளே சென்றால் அறைகள் ஏதும் இல்லாமல் இருப்பதைப் பார்த்து அதிசயிப்பீர்கள்.

ஒன்றன் மீது ஒன்றாக அமைந்த பால்கனி எனப்படும் உப்பரிகைகள், ஜன்னல்களும், அவற்றுக்குச் செல்லும் மாடிப்படிகளும் மட்டுமே ஹவா மகாலில் காணப்படும்.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் ஹவா மகாலைக் கட்டியவர், மகாராஜா சவாய் பிரதாப் சிங். அந்நாளில் அரண்மனைப் பெண்கள் பொது இடங்களுக்கு வருவதில்லை என்பதால், அவர்கள் மற்றவர்கள் பார்வையில் படாமல் ஊர்வலங்கள், அணிவகுப்புகளைக் காண்பதற்கே இந்த ஹவா மகாலை பிரதாப் சிங் கட்டினார். இதை காற்று அரண்மனை என்றும் அழைக்கின்றனர்.

இந்த ஹவா மகாலில் மொத்தம் 900 ஜன்னல்கள் இருக்கின்றன!

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com