லூமிக்ஸ் மிரர்லெஸ் கேமரா

பானாசோனிக் லைப் சொல்யூஷன்ஸ் இந்தியா நிறுவனம் புதிதாக லூமிக்ஸ் எஸ் 511 என்ற பெயரிலான மிரர்லெஸ் கேமராவை அறிமுகம் செய்துள்ளது.
லூமிக்ஸ் மிரர்லெஸ் கேமரா
Published on

இதில் ஆட்டோ போகஸ் மற்றும் ஸ்டெபிலைசேஷன் சிஸ்டம் உள்ளது. இதனால் உயர் தரத்திலான புகைப்படம் எடுக்கவும், வீடியோ பதிவு செய்யவும் உதவும். இது 24 மெகா பிக்ஸெல் கேமராவாகும். இதில் சி.எம்.ஓஸ். சென்சார் உள்ளது. அதிவேக சிக்னல் பிராஸசிங் நுட்பம் உள்ளது. இது வீடியோ ரெகார்டிங்கிற்கு மிகவும் உதவியாக உள்ளது. இதில் எடுக்கப்படும் காட்சிகளை ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டில் பதிவேற்றம் செய்யலாம். வை-பை இணைப்பு வசதி கொண்டது. இதன் விலை சுமார் ரூ.1,94,990. எப் 3, 5-5.6 லென்ஸுடன் கூடிய மாடலின் விலை சுமார் ரூ.2,24,990.

X

Daily Thanthi
www.dailythanthi.com