பிலிப்ஸின் டால்பி அட்மோஸ் சவுண்ட் பார்

ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் பிலிப்ஸ் நிறுவனம் புதிதாக அட்மோஸ் சவுண்ட்பாரை அறிமுகம் செய்துள்ளது.
பிலிப்ஸின் டால்பி அட்மோஸ் சவுண்ட் பார்
Published on

டி.வி.யில் காட்சிகளைக் காணும்போது அது திரையில் காண்பதைப்போன்ற அனுபவத்தை அளிக்க இந்த சவுண்ட்பார் உதவியாக இருக்கும். டி.ஏ.பி 8947 மற்றும் டி.ஏ.பி 7807 என்ற இரண்டு மாடல்களில் இவை அறிமுகமாகியுள்ளன. மிகவும் துல்லியமான இசையை இது வழங்கும். வயர்லெஸ் முறையில் சப் ஊபர் செயல்படும்.

இதில் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டுள்ள தால், ஒரிஜினல் இசையை இதில் கேட்டு மகிழலாம். இது 330 வாட்ஸ் திறன் கொண்டது. அறை முழுவதும் இசை நிரம்பியிருக்கும் வகையில் இதிலிருந்து இசை வெளிப்படும். குரல்வழிக் கட்டுப்பாட்டிலும் இது செயல்படும். இதிலிருந்து முப்பரிமாண இசை வெளியாகும். டி.ஏ.பி 7807 சவுண்ட் பாரின் விலை சுமார் ரூ.28,990. டி.ஏ.பி 8947 மாடல் விலை சுமார் ரூ.35,990.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com