போகோ எக்ஸ் 5 புரோ ஸ்மார்ட்போன்

போகோ நிறுவனம் புதிதாக போகோ எக்ஸ் 5 புரோ என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
போகோ எக்ஸ் 5 புரோ ஸ்மார்ட்போன்
Published on

இது 6.67 அங்குல முழு அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 778 ஜி எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. 6 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது.

பின்புறம் 108 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 67 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. மஞ்சள், கருப்பு, நீலம் உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் கிடைக்கும். 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் உள்ள மாடலின் விலை சுமார் ரூ.22,999. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.24,999.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com