போர்ஷே ஸ்டைல் எடிஷன்

சொகுசான விலை உயர்ந்த கார்களைத் தயாரிக்கும் போர்ஷே நிறுவனம் தனது 718, 911 மற்றும் டேகேன் மாடலில் புதிய ஸ்டைல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
போர்ஷே ஸ்டைல் எடிஷன்
Published on

இதன் விலை சுமார் ரூ.1.44 கோடியிலிருந்து ஆரம்பமாகிறது. 911 மாடல் விலை சுமார் ரூ.1.48 கோடி. டி வேரியன்ட் விலை சுமார் ரூ.1.81 கோடி.

இதில் ஜி.டி.எஸ். மாடல் விலை சுமார் ரூ.1.95 கோடி. அழகிய கண்கவர் வண்ணங்களில் இது வந்துள்ளது. இது 300 ஹெச்.பி. திறனை வெளியிடும் 2 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. இதில் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்கள் உள்ளன. 911 மாடல் 385 ஹெச்.பி. திறனை வெளியிடக்கூடிய 3 லிட்டர் 6 சிலிண்டர் என்ஜினைக் கொண்டுள்ளது.

இதை ஸ்டார்ட் செய்து 3.7 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டு விடலாம். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 270 கி.மீ.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com