உயரத்திற்கு உருளைக்கிழங்கு

25 வயதை கடந்த பின்னரும் சிலர் குட்டையான தோற்றத்துடன் காணப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் சிலவகை உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் மூலம் சில அங்குலம் வளரும் வாய்ப்பு உள்ளது.
உயரத்திற்கு உருளைக்கிழங்கு
Published on

உடல் வளர்ச்சியை அதிகரிக்க செய்வதில் ஹார்மோனுக்கு முக்கிய பங்கு உண்டு. 20 வயதை கடந்த பிறகு வளர்ச்சிக்கான ஹார்மோன்கள் சுரப்பது படிப்படியாக குறைய தொடங்கும். அதனால்தான் குறிப்பிட்ட வயதுக்கு மேல் உயரம் அதிகரிப்பதில்லை. உயரத்தை அதிகப்படுத்த விரும்புபவர்கள் தினமும் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சைக்கிளிங், நீச்சல் போன்ற பயிற்சிகள் உயரத்தை அதிகரிக்க செய்யும்.

உயரம் தாண்டுதல், ஸ்கிப்பிங், முன்னோக்கி குனிந்து கைவிரல்கள் கால்களில் படும்படி உடற் பயிற்சி செய்தல், நின்று கொண்டு பின்பு குனிந்து - உட்கார்ந்து - படுத்து - பின்பு குனிந்து எழுந்து இயல்பு நிலைக்கு வருதல், இரும்பு கம்பியில் தொங்கி பயிற்சி பெறுதல் போன்ற பயிற்சிகள் உயரத்தை அதிகரிக்க செய்யும்.

வைட்டமின் டி சத்து எலும்புகளின் வளர்ச்சியை அதிகரிக்க உதவி செய்யும். அதிகாலையில் சூரிய ஒளியின் மூலமே போதுமான வைட்டமின் டி சத்துக்களை பெற்று விடலாம். யோகாசனத்திற்கும் உடல் வளர்ச்சிக்கும் தொடர்பு இருக்கிறது. புஜங்காசனம், தாடாசனம், சர்வாங்காசனம் போன்றவை உயரம் அதிகரிக்க உதவும்.

கேரட், முட்டையின் மஞ்சள் கரு, மீன், உருளைக் கிழங்கு, பச்சை இலை காய்கறிகள், கோழி இறைச்சி, பீன்ஸ், முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகள், பட்டாணி, பழங்கள், பால் பொருட்கள் உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் 8 டம்ளர் தண்ணீர் பருகவும் மறக்கக்கூடாது. கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

ஆழ்ந்த தூக்கம் வளர்ச்சிக்கான ஹார்மோனின் செயல்பாடுகளுக்கு உத்வேகம் அளிக்கும். எலும்பு களுக்கும் நலம் சேர்க்கும். போதுமான நேரம் தூங்கி எழுவது சரியான உடல் வளர்ச்சிக்கு வழிவகை செய்துவிடும். உயரமாவதற்கு ஆசைப்பட்டு அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு உடலை குண்டாக்கி விடக்கூடாது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com