

ஆடியோ சாதன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பௌல்ட் நிறுவனம் வயர்லெஸ் இயர் போனை அறிமுகம் செய்துள்ளது. ஏர்பாஸ் எப்.எக்ஸ்.1 என்ற பெயரில் வந்துள்ள இந்த இயர்போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 24 மணி நேரம் செயல்படும்.
புளூடூத் 5.0 இணைப்பு வசதி கொண்டது. 10 மீட்டர் சுற்றளவில் வை-பை இணைப்பில் செயல்படும். கருப்பு, நீலம், வெள்ளை உள்ளிட்ட நிறங்களில் இது வந்துள்ளது. இந்த இயர்போனின் விலை சுமார் ரூ.1,499.