பங்குகளாக மாறாத கடன்பத்திரங்கள் மூலம் ரூ.690 கோடி திரட்ட பிரமல் என்டர்பிரைசஸ் திட்டம்

மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பிரமல் என்டர்பிரைசஸ் நிறுவனம், பங்குகளாக மாறாத கடன்பத்திரங்கள் மூலம் ரூ.690 கோடி திரட்ட திட்டமிட்டு இருக்கிறது.
பங்குகளாக மாறாத கடன்பத்திரங்கள் மூலம் ரூ.690 கோடி திரட்ட பிரமல் என்டர்பிரைசஸ் திட்டம்
Published on

பங்குகளாக மாறாத கடன்பத்திரங்கள் என்பது கடன் சார்ந்த ஆவணங்கள் ஆகும். இந்த ஆவணங்களை பங்குகளாக மாற்ற இயலாது. இந்த கடன்பத்திரங்களுக்கு பொதுவாக அதிக வட்டி வருவாய் கிடைக்கிறது. எனவே முதலீட்டாளர்களில் பலர் இந்த வகை கடன்பத்திரங்களை வாங்க ஆர்வம் காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிரமல் என்டர்பிரைசஸ் நிறுவனம் இப்போது தனிப்பட்ட முறையில், தலா ரூ.10 லட்சம் முகமதிப்பு உள்ள பங்குகளாக மாறாத 6,900 கடன்பத்திரங்களை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கி ரூ.690 கோடி திரட்ட உள்ளது. இதற்கு இந்நிறுவன இயக் குனர்கள் குழுவின் நிர்வாக கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில், செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது பிரமல் என்டர்பிரைசஸ் பங்கு ரூ.1,915-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே குறைந்தபட்சமாக ரூ.1,815-க்கு சென்றது. இறுதியில் ரூ.1,826.30-ல் நிலைகொண்டது. முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 3.92 சதவீத சரிவாகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com