புஷ்பா பட பாடலுக்கு அழகாக நடனமாடும் மனிதக்குரங்கு! வைரல் வீடியோ

நடிகர் அல்லு அர்ஜுன் நடன அசைவை போலவே, வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள ஒரு மனிதக்குரங்கு நடனமாடி அசத்துகிறது.
புஷ்பா பட பாடலுக்கு அழகாக நடனமாடும் மனிதக்குரங்கு! வைரல் வீடியோ
Published on

மும்பை,

புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி பாடலுக்கு, நடிகர் அல்லு அர்ஜுன் அழகாக நடனமாடும் நடன அசைவை போலவே, வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள ஒரு மனிதக்குரங்கு நடனமாடி அசத்துகிறது.

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் கடந்த ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி பாடல் மிகவும் பிரபலமானது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கூட இப்பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இப்படி உலகமெங்கும் பிரபலமடைந்த இந்த பாடலும் அதில் நடனமாடி அசத்தி ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகர் அல்லு அர்ஜுனின் அசைவுகளும் விலங்குகளையும் விட்டுவைக்கவில்லை.

அந்த வீடியோவில், ஸ்ரீவள்ளி பாடல் ஒலிபரப்பப்பட்டவுடன், சரணாலயத்தில் இருக்கும் ஒரு மனிதக்குரங்கு முதலில் நடந்து வருகிறது. தொடர்ந்து பாடலின் இசைக்கேற்ப நடனமாடி அசத்தி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த வீடியோ இப்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை 11 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com