வானவில் : ‘லாவா இஸட் 41’ ஸ்மார்ட்போன்

லாவா நிறுவனம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.3,899 ஆகும்.
வானவில் : ‘லாவா இஸட் 41’ ஸ்மார்ட்போன்
Published on

லாவா இஸட் 41 என்ற பெயரிலான இந்த ஸ்மார்ட்போன் 5 அங்குல திரையைக் கொண்டது. இதில் 1.4 கிகாஹெர்ட்ஸ் ஸ்பீட்ரம் குவாட்கோர் பிராசஸர் உள்ளது. 1 ஜி.பி. ரேம் 16 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதை 128 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்ய முடியும்.

இதில் 5 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 2 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. 4 ஜி வோல்டே, புளூடூத் வி 4.2, ஜி.பி.எஸ்., மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், எப்.எம். ரேடியோ, ஹெட்போன் ஜாக் வசதி கொண்டது. இதில் 2,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 21 மணி நேரம் செயல்படக் கூடியது. இதன் எடை 160 கிராம் மட்டுமே. நீலம், சிவப்பு உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com