வானவில் : சான்யோ கெய்சன்

வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் சான்யோ நிறுவனம் கெய்சன் ஆண்ட்ராய்டு டி.வி.க்களை அறிமுகம் செய்து உள்ளது.
வானவில் : சான்யோ கெய்சன்
Published on

49, 55 மற்றும் 65 அங்குல அளவுகளில் மூன்று டி.வி.க்களை அறிமுகம் செய்து உள்ளது. ஏற்கனவே இந்நிறுவனத் தயாரிப்புகளில் 32 அங்குல டி.வி. கடந்த செப்டம்பரில் அறிமுகமாகி மிகுந்த வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்த அளவுகளில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி.யை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஐ.பி.எஸ். சூப்பர் பிரைட் எல்.இ.டி. டிஸ்பிளே உள்ளது.

இதில் உள்ள உள்ளடான தொழில் நுட்பம் குரோம்கேஸ்ட் இணைப்பை பெற உதவுகிறது. டால்பி விஷன், டால்பி ஆடியோ, டி.டி.எஸ். ட்ரூ சவுண்ட் உள்ளிட்ட பல வசதிகள் இதில் உள்ளன. நெட்பிளிக்ஸ் இணைப்பு பெறவும் முடியும். 4 கே மாடலில் 20 வாட் பாக்ஸ் ஸ்பீக்கர் உள்ளதால் இனிய இசை கிடைக்கிறது.

இதில் 49 அங்குல டி.வி.யின் விலை ரூ.29,999 ஆகும். 55 அங்குல மாடல் விலை ரூ.34,999 மற்றும் 65 அங்குல மாடல் விலை ரூ.59,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com