ரேஞ்ச் ரோவர் வெலார்

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் புதிய எஸ்.யு.வி. மாடலை ரேஞ்ச் ரோவர் வெலார் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
ரேஞ்ச் ரோவர் வெலார்
Published on

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.79.87 லட்சம். 2 லிட்டர் டீசல் என்ஜினைக் கொண்ட இந்த கார் 204 ஹெச்.பி. திறனையும், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இதில் புதிதாக பி.வி. புரோ இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. நான்கு சிலிண்டர் சக்தி மிகுந்த என்ஜின் மற்றும் சிறிய அளவிலான ஹைபிரிட் தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டுள்ளது. மிகவும் சவுகரியமான பயணத்துக்கு ஏர் சஸ்பென்ஷன் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 8 ஆட்டோமேடிக் கியர் உள்ளது.

360 டிகிரி கோணத்தில் சுற்றிலுமான நிகழ்வை காட்டும் கேமரா, சாலை இரைச்சல் சிறிதும் இல்லாத வகையில் இதன் உள்புறம் உள்ளது. மேலும் உள்புறம் சுத்தமான காற்று சுழலும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

இப்புதிய மாடல் ஏற்கனவே இந்நிறுவனத்தின் ஜாகுவார் எப் பேஸ் மாடல், மெர்சிடஸ் பென்ஸ் ஜி.எல்.இ. கூபே, பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 6 ஆகிய மாடல் காருக்குப் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com