ரியல் மி 10 ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனம் ரியல்மி 10 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 4-ஜி மாடலாகும்.
ரியல் மி 10 ஸ்மார்ட்போன்
Published on

இதில் 6.4 அங்குல சூப்பர் அமோலெட் திரை பயன்படுத்தப் பட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளது. ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அப்டேட் செய்யும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. ஆக்டாகோர் மீடியா டெக் ஹீலியோ பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் உடையது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது.

பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 33 வாட் வூக் சார்ஜரு டன் வந்துள்ளது. வெள்ளை, கருப்பு நிறங்களில் வந்துள்ளது.

4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.13,999. இதில் 8 ஜி.பி. ரேம்,128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.16,999.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com