ரியல்மி 9 ஐ ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனம் 9 ஐ என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
ரியல்மி 9 ஐ ஸ்மார்ட்போன்
Published on

இது 6.6 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டது. இதில் மீடியாடெக் டைமென்சிடி 810 எஸ்.ஓ.சி. பிராசஸர், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளது. ஜொலிக்கும் வகையிலான மேல் பாகத்தைக் கொண்டது.

இதன் பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளன. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 18 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.

4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டது. மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் இதன் திறனை 2 டி.பி. வரை அதிகரிக்க முடியும். இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. நீலம், கருப்பு, தங்க நிறங்களில் வந்துள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.14,999. இதில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.16,999.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com