ரியல்மி சி 25 ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனம் சி 20, சி 21 மற்றும் சி 25 என்ற பெயர்களில் மூன்று மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
ரியல்மி சி 25 ஸ்மார்ட்போன்
Published on

இவை அனைத்துமே 6.5 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டவையாகும். சி 20 மற்றும் சி 21 மாடலில் மீடியா டெக் ஹீலியோ ஜி 35 பிராசஸர் உள்ளது. சி 25 மாடலில் மீடியா டெக் ஹீலியோ ஜி 70 பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது 4 ஜி.பி. ரேம் கொண்டதாகும்.

இந்த மாடலில் 13 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது. அதேபோல பின்புறம் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. இவை அனைத்திலுமே 2 சிம் கார்டு போடும் வசதி உள்ளது.

சி 21 மாடல் விலை சுமார் ரூ.7,999. சி 20 மாடல் விலை சுமார் ரூ.6,999. சி 25 மாடல் விலை சுமார் ரூ.9,999. இதில் அதிக நினைவகத் திறன் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.10,999.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com