சிவப்பு தங்கம் பூக்கும் வயல்கள்

குங்குமப்பூ, உலகில் விலை உயர்ந்த வாசனை மற்றும் மசாலா பொருள். உணவுத் துறையிலும், அழகுக் கலைத்துறையிலும் இது முக்கியத்துவம் பெறுகிறது.
சிவப்பு தங்கம் பூக்கும் வயல்கள்
Published on

ஈரானில்தான் அதிக அளவில் குங்குமப்பூ விளைவிக்கப்படுகிறது. அதாவது உலகளாவிய தேவையில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக ஈரான்தான் உற்பத்தி செய்கிறது. இந்தியாவில் காஷ்மீர் மாநிலம்தான் குங்குமப்பூவின் தாயகம். ஸ்ரீநகரில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் பாம்பூர் என்ற சிறிய கிராமம் குங்குமப்பூ உற்பத்திக்கு புகழ் பெற்றது. இது தரம் நிறைந்ததாக இருக்கிறது. அங்கு உயரமான பனி சூழ்ந்த மலை களுக்கு மத்தியில் ஊதா நிறத்தில் குங்குமப்பூ வயல்கள் காட்சி தரும்.

குங்குமப்பூ, குரோகஸ் எனும் மலர்களில் இருந்து கிடைக்கிறது. ஒவ்வொரு மலரில் இருந்தும் இதழ்கள், மஞ்சள் இழைகள், சிவப்பு இதழ்கள் என மூன்று விதமான பாகங்கள் பிரித்தெடுக்கப்படும். இவற்றுள் சிவப்பு இழைகளில் பெறப்படுவதுதான் சுத்தமான குங்குமப்பூ வாகும். அதாவது குரோகஸ் மலர்களின் சூல் முடியை உலர்த்தியதும் கிடைப்பதுதான் குங்குமப்பூவாக சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. குங்குமப்பூவை பயிரிட்டு அறுவடை செய்வது கடினமான பணி. அதுதான் குங்குமப்பூவை மதிப்புமிக்க பொருளாக மாற்றுகிறது.

குரோகஸ் செடியில் பூக்கும் மென்மையான மலர்களை கூடைகளில் சேகரித்து தரம்பிரித்து உலரவைத்து அதன் இழைகளை மிதமான தீயில் உலர்த்தி குங்குமப்பூவை தயாரிக்கிறார்கள். ஒரு கிலோ குங்குமப்பூ தயாரிக்க ஒரு லட்சத்து 50 ஆயிரம் மலர்கள் தேவைப்படுகின்றன. பாம்பூர் கிராமத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குங்குமப்பூ சாகுபடியில் ஈடுபடுகிறார்கள். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1700 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த கிராமத்தில் படிந்திருக்கும் வண்டல் மண் குங்குமப்பூ பயிரிடுவதற்கு உகந்ததாக அமைந் திருக்கிறது. காஷ்மீரின் பள்ளத்தாக்கு பகுதி களிலும் குங்குமப்பூ சாகுபடி செய்யப்படுகிறது. சிவப்பு தங்கம் என்று அழைக்கப்படும் இந்த பூ காஷ்மீரில் தனித்துவம் பெற்றுத்திகழ்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com