

வயிற்று வலி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், உஷ்ணம் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்வார்கள். உடல் வெப்பத்தை தணித்து, உடல் சூட்டை விரட்டியடிக்கும் பானங்கள் குறித்து பார்ப்போம்.
எள்: இது உடல் எடையை சீராக பராமரிக்கும் தன்மை கொண்டது. தினமும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு ஒரு டேபிள்ஸ்பூன் எள்ளை அப்படியே மென்று சாப்பிடலாம். இதனை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.
மாதுளை: மாதுளம் பழத்தை கோடை காலத்தில் சாப்பிடுவது அவசியமானது. ஜூஸாகவும் பருகலாம். தினமும் காலையில் ஒரு டம்ளர் மாதுளை ஜுஸ் பருகி வரலாம். அதனுடன் இரண்டு துளிகள் பாதாம் எண்ணெய்யும் கலந்து கொள்ளலாம். இது உடல் வெப்பத்தை குறைக்க உதவும்.
தண்ணீர்: உடலை குளிர்ச்சி படுத்துவதில் தண்ணீருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. கோடை காலத்தில் தண்ணீர் அதிகம் பருகுவது நீரிழப்பை தடுக்க உதவும். அத்துடன் அகன்ற பாத்திரத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி அதில் கால்களை ஊன்றி கால் மணி நேரம் நிற்கலாம். தினமும் இவ்வாறு செய்து வந்தால் உடலில் இருக்கும் அதிகப்படியான வெப்பம் வெளியேறிவிடும்.
வெந்தயம்: காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டேபிள்ஸ்பூன் வெந்தயத்தை வாயில் போட்டு மென்று, தண்ணீர் பருக வேண்டும். கோடையில் இந்த பழக்கத்தை தவறாமல் பின்பற்றி வந்தால் உடல் வெப்பம் தணிந்து விடும்.
சோம்பு: இரண்டு டேபிள்ஸ்பூன் சோம்பை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்துவிட்டு, காலையில் அந்த நீரை வடிகட்டி குடித்து வரலாம். இது உடல் வெப்பத்தை குறைக்கும் தன்மை கொண்டது.
சந்தனம்: குளிர்ந்த நீர் அல்லது குளிர்ந்த பாலில் சந்தனத்தை போட்டு குழப்பி நெற்றி, தாடை, முகத்தில் தடவிவிட்டு உலர்ந்ததும் கழுவி விடலாம். உடல் சூடு குறைந்துவிடும். மேலும் சந்தனப்பொடியுடன் ரோஸ் வாட்டரை சேர்த்து குழப்பியும் முகத்தில் உபயோகிக்கலாம். இதுவும் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி கொடுக்கும்.
பால்: பாலுடன் தேன் கலந்து பருகி வருவதும் உடல் வெப்பத்தை தணிக்க உதவும்.
இளநீர்: கோடையில் உடல் வறட்சி ஏற்படாமல் தடுத்து, குளிர்ச் சியை தக்கவைக்கும் தன்மை கொண்டது இளநீர். அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற பானமாகவும் இது விளங்குகிறது.
வைட்டமின் சி: ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற வைட்டமின் சி சத்து கொண்டவற்றை கோடை காலத்தில் சாப்பிடுவது உடல் வெப்பத்தை குறைக்க உதவும். கோடை கால சீசனில் கிடைக்கும் பழங்கள் அனைத்தையும் சாப்பிடலாம். இவைகளை ஜூஸ் தயாரித்தும் பருகி வரலாம்.
கற்றாழை ஜூஸ்: கற்றாழையின் சதைப்பகுதியை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவிவிடலாம். அது முகத்திற்கு மட்டுமின்றி உடலுக்கும் குளுமை சேர்க்கும். மேலும் கற்றாழையின் சதை பகுதியுடன் சிறிதளவு தேன், தண்ணீர் கலந்து பருகிவந்தால் உடல் சூடு தணியும். கரும்பு ஜூஸும் உடல் உஷ்ணத்தை குறைக்கும்.
புதினா டீ: ஒரு கைப்பிடி அளவு புதினாவை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து பருகி வரலாம். புதினா குளிர்ச்சி தன்மை கொண்டது என்பதால் உடல் சூடு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வளிக்கும்.
வெண்ணெய்: ஒரு டம்ளர் பாலில் இரண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் கலந்து பருகி வருவதன் மூலமும், உடல் வெப்பத்தை குறைக்கலாம். உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகம் இருப்பவர்கள் இதனை தவிர்த்துவிடலாம்.
மோர்: இது உடலை குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்ளக்கூடியது. மோரில் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் சத்துக்கள் அனைத்தும் இருக்கின்றன. குறிப்பாக புரோபயாட்டிகள் அதிகம் காணப்படுகின்றன. அதனால் கோடைக்கு ஏற்ற பானமாக விளங்குகிறது.