கொரோனாவுக்கு எதிராக ரெம்டெசிவிர் மருந்து மிக சிறப்பாக செயல்படும்; இங்கிலாந்து ஆய்வில் கண்டுபிடிப்பு

கொரோனாவுக்கு எதிராக ரெம்டெசிவிர் மிக சிறப்பாக செயல்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவுக்கு எதிராக ரெம்டெசிவிர் மருந்து மிக சிறப்பாக செயல்படும்; இங்கிலாந்து ஆய்வில் கண்டுபிடிப்பு
Published on

லண்டன்,

ரெம்டெசிவிர் மருந்து, ஹெபாடிடிஸ் சி, எபோலா ஆகிய நோய்களை குணப்படுத்தவே உருவாக்கப்பட்டது. இந்த மருந்து, கொரோனா மரணத்தை கட்டுப்படுத்த உதவாது என்று உலக சுகாதார அமைப்பு கடந்த அக்டோபர் மாதம் அறிவித்தது.

இந்தநிலையில், இந்த மருந்தை ஒரே ஒரு நோயாளியிடம் செலுத்தி, இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 31 வயதான அந்த நோயாளி, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியாத, அரிய மரபணு கோளாறு உடையவர்.

அவருக்கு முதலில் ரெம்டெசிவிர் மருந்து அளிக்கப்பட்டு கொரோனா குணமானது. ஆனால், ஒரு வாரத்துக்குள் மீண்டும் கொரோனா தாக்கியது. மீண்டும் அந்த மருந்து கொடுக்கப்பட்ட நிலையில், முற்றிலும் குணமடைந்தார்.எனவே, கொரோனாவுக்கு எதிராக ரெம்டெசிவிர் மிக சிறப்பாக செயல்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com