

இதில் 8 50 ஆக்டா கோர் எக்ஸினோஸ் பிராசஸர் உள்ளது. நீடித்து செயல்படும் விதமாக 6 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி, 15 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.
ஐசோசெல் பிளஸ் தொழில்நுட்பம் கொண்ட 48 மெகா பிக்ஸெல் குவாட்கோர் கேமரா உள்ளது. மான்ஸ்டர் ரீலோடட் என்ற பெயரில் இந்தப் பிரிவில் மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6.5 அங்குல ஹெச்.டி. பிளஸ் இன்பினிடி திரை உள்ளது.
இதன் பக்கவாட்டில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளது. கருப்பு, நீலம், வெள்ளை நிறங்களில் வந்துள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.10,999. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் உள்ள மாடல் விலை சுமார் ரூ.13,499.