சாம்சங் கேலக்ஸி ஏ 53

இந்தியாவின் மிகவும் நம்பகமான ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் முன்னிலை வகிக்கும் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ 53 மாடலை அறிமுகம் செய்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ 53
Published on

இதில் 64 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. செல்பி பிரியர்களுக்காக முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதில் 6.5 அங்குல அமோலெட் திரை, கொரில்லா கிளாஸ் 5 உள்ளது. இது நீடித்து உழைப்பதை உறுதி செய்வதோடு கீறல் விழுவதை தவிர்க்கவும் உதவுகிறது. இதில் 16 ஜி.பி. ரேம் உள்ளது.

இதில் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இது 25 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. 30 நிமிடம் சார்ஜ் செய்தால் 50 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும். இது இரண்டு நாட்கள் செயல்படும் திறன் கொண்டது. இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளது. செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போது உங்களைப் பற்றிய தகவலை பாதுகாக்கும் வசதி இதில் உள்ளது.

கருப்பு, வெள்ளை, வான் நீலம் உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் வந்துள்ளது. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.34,499. இதில் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் உடைய மாடல் விலை சுமார் ரூ.35,999.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com