சாம்சங் கேலக்ஸி எப் 23

சாம்சங் நிறுவனத் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது கேலக்ஸி சீரிஸ் ஸ்மார்ட்போன்களாகும். இதில் தற்போது எப் 23 மாடல் அறிமுகமாகியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எப் 23
Published on

6.6 அங்குல எல்.சி.டி. திரை, ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் பிராசஸர் உள்ளது. இதில் 4 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல்கள் வந்துள்ளன. நினைவகத் திறனை மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் 1 டி.பி. வரை விரிவு படுத்தலாம்.

இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் பயன் படுத்தப்பட்டுள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி, 25 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.15,999. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.16,999.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com