சாம்சங் கேலக்ஸி எம் 04

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி சீரிஸ் புதிதாக எம் 04 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம் 04
Published on

இது 6.5 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டுள்ளது. இதில் மீடியாடெக் ஹீலியோ பி 35 எஸ்.ஓ.சி. பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. நினை வகம் கொண்டதாக இந்த மாடல்கள் உள்ளன.

இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்கு தளம் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. பின்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 5 மெகா பிக்ஸெல் கேமரா வும் உள்ளது. நீண்ட நேரம் செயல் படுவதற்காக இதில் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. 15 வாட் சார்ஜருடன் இது வந்துள்ளது.

கருப்பு, பச்சை உள்ளிட்ட கண் கவர் வண்ணங்களில் கிடைக்கும். 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.8,499. 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.9,499.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com